நாட்டின் பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம் என்ற தீர்வை 24 மணி நேரத்தில் மக்களிடத்தில் எதிர்க்கட்சி முன்வைக்க வேண்டும் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சவால் விடுத்துள்ளார்.
பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானது. தேவைக்கு ஏற்ப விநியோகம் இல்லாத போது, பொருட்களின் விலை உயரும், பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். மீண்டும் சந்தைக்கு பொருட்கள் வரும்போது, மீண்டும் விலை குறைகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
உலகளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ள சமயத்தில் எதிரணி தம்பட்டம் அடித்து வருகின்றன. தம்பட்டம் அடிக்கும் நிலையில் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை தயாரித்திருப்பார்கள். அதனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருந்தால் அதை மீட்டெடுப்பதற்கான வழியை மக்களுக்கு 24 மணி நேரத்தில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சியிடம் எந்த திட்டமும் இல்லை என்பதுவே உண்மையான விடயம் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.