இலங்கையில் ஏற்படும் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 8 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக பேராசிரியர் சாந்த வல்பொலகே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளுடன் கூடிய அறிக்கையை விரைவில் கையளிக்குமாறு ஜனாதிபதி குறித்த குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.