194
கிளிநொச்சியிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு கதிர்காமத்தை நோக்கி பயணித்த குறித்த பேருந்து இன்று அதிகாலை அம்பாறை – பதியத்தலாவை கல்லோடை பாலத்துக்கு அருகில் சாரதியின் தூக்க கலக்கத்தை அடுத்து வீதியை விட்டு விலகி மோதி விபத்துக்குள்ளானதாக தொிவிக்கப்பட்டுள்ளது
விபத்தில் காயமடைந்த 17 பேரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love