170
கடமையின் போது போதையில் காணப்பட்ட கொடிகாமம் காவல் நிலையத்தை சேர்ந்த இரு காவற்துறை உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தொிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் நேற்ற நண்பகல் கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசேட காவற்துறைப் பரிசோதனையில் அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த இருவரிடமும், சாவகச்சோி காவற்துறை அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் குற்றம் உறுதியான நிலையில் இருவரும் மறு அறிவித்தல் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Spread the love