கடினமான நேரங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுடனான தொலைபேசி உரையாடலுக்குப் பின்னா் , அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள ஜெய்சங்கர், நம்பகமான நண்பரான இந்தியா இந்த கடினமான காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருக்கவும். நெருங்கிய தொடர்பில் இருக்கவும் ஒப்புக்கொண்டதாக ருவிட்டாில் பதிவு செய்துள்ளார்.
இதேவேளை, இது தொடா்பில் கருத்துரைத்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி,
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொிவித்த போது , இலங்கை மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் எனத் தொிவித்துள்ளாா்.
மேலும் . மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் கடந்த மாதம் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தொிவித்துள்ளாா்.
அத்துடன் கடற்றொழில் தொடர்பான கூட்டு செயற்குழு கூட்டத்தை விரைவில் நடத்துவது குறித்து இரு தரப்பும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இது இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்கும் எனவும் பாக்சி தொிவித்துள்ளாா்.
திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணைகளை நவீனமயமாக்குவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் இது எரிபொருளைச் சேமிப்பதை அனுமதிக்கும் மற்றும் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும், எனவும் அவா் தொிவித்துள்ளாா்.
திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தங்கள் நேற்று வியாழக்கிழமை (6) கைச்சாத்திடப்பட்டது
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவிள் புதுடெல்லிப் பயணத்தின் போது, உணவு , சுகாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, செலுத்தும் நிலுவை பிரச்சினைகள் மற்றும் இலங்கையில் இந்திய முதலீடுகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து விவாதித்ததாகவும் மேலும் ஆலோசனைகள் நடந்து வருவதனைப் புரிந்துகொள்வதாகவும் பாக்சி குறிப்பிட்டுள்ளாா்