யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க, பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் என்பனவற்றுடன் விருந்தினர்கள் யாழ் மாநகர சபை முன்றலில் இருந்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது யாழ் மாநகர சபையால் இயல்துறைக்கான அரசகேசரி விருது கவிஞர். சோ.பத்மநாதனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த அமர்வில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் குழுவினரின் வழக்காடு மன்றம் விசேட அம்சமாக அமைந்தது.
காலை முதல் இரவு வரை இயற்துறை, இசைத்துறை, நாடகத்துறை என மூன்று அமர்வுகளாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது