ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், எதிர்வரும் 23ஆம் திகதியன்று நடத்தப்படவிருந்த சர்வக்கட்சி மாநாட்டில், பங்குப்பற்றுவது இல்லையென ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற (21.03.22) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் தாங்கள் பங்கேற்க போவதில்லை. அரசாங்கத்தின் பங்காளிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில்ல மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அறிவித்திருந்தனர். அத்துடன், ஜே.வி.பியும் பங்கேற்காது என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.