நாகை மாவட்டம் கோடியக்கரை படகுத் துறை முகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பலில் கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை (29) கண்ணாடி இழை படகு ஒன்றை சோதனை செய்தனர்.
இதன் போது குறித்த படகு இலங்கை நாட்டைச் சேர்ந்த படகு என்றும் அதில் வந்தவர் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சாந்தரூபன் (வயது-30) என்றும் தெரியவந்தது.
இதையடுத்து இந்திய எல்லையில் தடை மீறி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினர் படகை கைப்பற்றி அவரை கைது செய்து அவரையும் கைப்பற்றிய படகையும் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவாிடம் கடலோர காவல் படை அதிகாரிகள், மற்றும் கியூ பிராஞ்ச் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.