அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரகடனப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் நிலவும் நிலைமை, பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பேணுதல், சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகங்கள், சேவைகளைப் பேணுதல் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.