டென்மார்க்கின் கோபன்ஹேகன் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டனர்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள ஃபீல்ட்ஸ் என்ற பிரபலமான வணிக வளாகத்தில் நேற்றைய ஞாயிற்றுக்கிழமை (03.07.22) விடுமுறை தினத்தில் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
அந்த நேரத்தில் திடீரென மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டினால் பொதுமக்கள் பலரும் சிதறுண்டு ஓடியதாகவும் பலத்த காயங்களுடன் பலர் வணிக வளாகத்தில் வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் காவற்துறையினர் சம்ப இடத்தை சுற்றிவளைத்து 22 வயதான டேனிஷ் என்ற இளைஞரை ர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றியதுடன், படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மூவரின் நிலை கவலைக்கிடம் என வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து டென்மார்க் கருத்து வெளியிட்டுள்ள டென்மார்க் காவற்துறையினர், டேனிஷ் என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது “பயங்கரவாதச் செயல்” என்பதை நிராகரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.