161
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை, அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தன்னிடம் இல்லை.” என ரணில் விக்கிரமசிங்க அந்த ஊடகத்துக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ, ஜூலையில் நாட்டை விட்டு வெளியேறி யூலை 13ல் தனது பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
Spread the love