இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் முதலாவது உயிாிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது . உலகளவில் பெரும்பாலான நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருகின்ற நிலையில் இந்தியாவிலும் அதன் பரவல் அதிகாித்து வருகின்றது. குறிப்பாக கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா சென்ற 22 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் காணப்பட்டதனையடுத்து அவர் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட போதும் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் இளைஞர் உயிரிழந்துள்ளார் என தொிவிக்கப்பட்டுள்ளது
குரங்கு அம்மை அறிகுறியுடன் இருந்த நபர் உயிரிழந்தது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.