144
யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர் குழுவை காவல்துறையினா் தேடி வருகின்றனர்.
நான்கு இளைஞர்கள் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர்.
தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love