163
அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி விசாரணைக்கு தேவையான அடிப்படை உண்மைகள் இன்று பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love