பிாித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி செப்டம்பர் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அன்றைய தினம் வரை இரங்கல் தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் வைக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது