பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இளவரசர் பிலிப் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே மகாராணியின் உடலும் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்றையதினம் பிரித்தானியாவில் பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.