Home இலங்கை தேசிய சபை முதல் தடவையாக கூடவுள்ளது!

தேசிய சபை முதல் தடவையாக கூடவுள்ளது!

by admin

தேசிய சபை நாளை மறுதினம் (29.09.22) வியாழக்கிழமை முதல் தடவையாக கூடவுள்ளதாகவும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


தேசிய சபைக்ன பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அண்மையில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.


அதனடிப்படையில், டக்ளஸ் தேவானந்தா, நசீர் அஹமட், டிரான் அலஸ், சிசிர ஜயக்கொடி, சிவனேசத்துரை சந்திரகாந்தன், ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரவூப் ஹக்கீம், பவித்ரா வன்னியாரச்சி, வஜிர அபேவர்தன, நாமல் ராஜபக்ஸ, ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அத்துரலியே ரத்தன தேரர், அசங்க நவரத்ன, அலி சப்ரி ரஹீம், C.V.விக்னேஸ்வரன், வீரசுமன வீரசிங்க மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் தேசிய சபையின் உறுப்பினர்களாவர்.


இவர்கள் தவிர, A.L.M.அதாவுல்லா, திஸ்ஸ விதாரண, ரிஷாட் பதியுதீன், விமல் வீரவன்ச, வாசுதேவ நாணாயக்கார, பழனி திகாம்பரம், மனோ கணேசன், உதய கம்மன்பில மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.


எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி – டலஸ் அழகப்பெரும அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் உள்ளடக்கப்படவில்லை.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More