205
காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது
களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, மத்துகம, பண்டாரகம, பாலிந்தநுவர, புளத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட்ட, தொடங்கொட ஆகிய பிரதேசங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலப்பாத்த, அயகம, கிரியெல்ல, பெல்மெடுல்ல, நிவித்திகல, கலவான ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு ஆபத்து காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love