164
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின் கீழ் யாழ் மாநகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கடைத்தொகுதி யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மாநகர சுகாதார குழுத்தலைவர் வ.பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், கல்வியங்காடு வர்த்தக சங்கத்தினர், கல்வியங்காடு சந்தை வியாபாரிகள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love