164
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஒரு வருட ஞாபகார்த்த நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன்போது கௌரி சங்கரி தவராசாவின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய “கௌரி நீதியின் குரல்” புத்தகமும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love