209
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடலில் இறங்கி மீன் பிடித்த கடற்தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குருநகரை சேர்ந்த அலோசியஸ் ஜான்சன் (வயது 40) எனும் கடற்தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.
கடலில் இறங்கி வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளை, கடற்தொழிலாளி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். அவரை சக தொழிலாளிகள் தேடிய போது , அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Spread the love