305
யாழ்ப்பாணம் – கோண்டாவிலில் அமைந்துள்ள நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் போசாக்கு கண்காட்சி இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்களிடையே ஏற்பட்டுள்ள போசாக்கு குறைபாடு தொடர்பில் அவர்களுக்கு தேவையான பாரம்பரியமான போசாக்கான உணவுகளை அடையாளப்படுத்தும் நோக்கில் குறித்த கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட பீடாதிபதி சுரேந்திரகுமரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சி மதியம் 2 மணி வரை இடம்பெற்றது. நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி அ.ஜெயகுமார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் , குடும்ப நல மாதுக்கள் பங்கேற்றதுடன் கண்காட்சியை பார்வையிடுவதற்காக பாடசாலை முன்பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love