199
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபைக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்ற பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார்.
இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார். உயர்ஸ்தானிகரின் பயணத்தையடுத்து யாழ் மாநகர சபை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Spread the love