163
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் வீதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று மீட்கப்பட்டுள்ளது.
அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதியிலேயே முதலை வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காணப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு நீரேரியில் முதலை இருப்பதாக ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love