யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட சத்திர சிகிச்சை துறையும் , பெண் நோயியல் மற்றும் மகப்பேறு துறையும் இணைந்து, கருவுறுதல் விழிப்புணர்வு தினமும் மற்றும் நூல் வெளியீடும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை (02.12.22) யாழ். மருத்துவ பீடத்தில் கூவர் அரங்கில் மதியம் 2 மணியளவில் நடாத்தவுள்ளன.
அதன் போது, வைத்திய நிபுணர் பா. பாலகோபி மற்றும் வைத்திய நிபுணர் சி. ரகுராமன் ஆகியோர் இணைந்து எழுதிய “குழந்தையின்மை விளக்கங்களும் தீர்வுகளும்” என்ற நூல் வெளியீடும் கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு மூலம் குழந்தையின்மை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதற்கான தீர்வுகளை தேவையுடையவர்கள் பொருத்தமான காலத்தில் பெற்றுக் கொள்ள உதவும் எனவும் , கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு யாழ் மருத்துவ பீடத்தினால் எதிர்வரும் காலங்களில் ஆண்டுதோறும் “கருவுறுதல் விழிப்புணர்வு வாரமாக”(Fertility Awareness Week )கொண்டாடப்பட்டு நாடு முழுவதும் குழந்தையின்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.