சுற்றுலா விசாவில் பணியாளர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பி அது தொடர்பில் உரிய தகவல்களை வழங்காத 400 வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (03) நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தொிவித்துள்ளாா்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களை ஒழுங்குபடுத்தும் பணியை சிறப்பாக செய்து வருவதாகவும் சுற்றுலா விசாவில் வௌிநாடுகளுக்கு பணியாளர்களை அனுப்பி அது தொடர்பில் தகவல் வழங்காத 400 முகவர் நிறுவனங்களை இதுவரை தடை செய்துள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.