180
வட மாகாண சுகாதார அமைச்சுக்கு இடமாற்றப்பட்ட கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என். சரவணபவன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொருத்தமற்றது என ஆரம்ப புலன் விசாரணை அறிக்கையில் சுட்டிக்கட்டப்பட்டுள்ளதுடன் மீ ளவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
கிளிநொச்சியில் அமைந்துள்ள தொற்றுநோய் வைத்தியசாலையில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைகேடுகள் தொடர்பில் தற்காலிகமாக மாகாண சுகாதார அமைச்சுக்கு இணைக்கப்பட்டிருந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என். சரவணபவன் மீளவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்,
அதாவது கிளிநொச்சி பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழான கிருஷ்ணாபுரம் தொற்றுநோயியல் வைத்தியசாலை யில் இடம் பெற்ற மோசடி செயல்பாடுகள் தொடர்பான உள்ளக கணக்காய்வு அவதானிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப புலனாய்வு அறிக்கையில் நிதி பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் PFD/ PMD/149/00/2020-2 இலக்கம் கொண்ட 04-04-2020 சுற்று நிருபத்தின் படி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என். சரவணபவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொருத்தமற்றது எனகுறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love