150
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய விளக்கமறியல் கைதி கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடியமை, திருடிய மோட்டார் சைக்கிளில் உரும்பிராய் பகுதியில் சங்கிலி அறுத்தமை, இளவாலை பகுதியில் இரண்டு வீடுகளின் கதவுகளை உடைத்து, வீட்டினுள் நுழைந்து திருடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட இளவாலை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.
அந்நிலையில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சிறைச்சாலை பாதுகாவலர்களின் பாதுகாப்பில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடி இருந்தார்.
தப்பியோடிய நபரை, சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் தேடி வந்த நிலையில், நேற்றைய தினம் சனிக்கிழமை (10.12.22) கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
Spread the love