Home இந்தியா பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்!

பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்!

by admin

மிஸ்ஸியம்மா, தெனாலி ராமன், தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

அவருக்கு வயது 86. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜமுனா. 1953ம் ஆண்டு தெலுங்கில் வெளியான புட்டிலு படத்தின் மூலம் 16 வயதில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை ஜமுனா, நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்டு.

நடிகை சாவித்ரி அழைத்ததால் சினிமாவுக்கு வந்தவர் நடிகை ஜமுனா. தெலுங்கில் வெளியான புட்டிலு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் 1954ம் ஆண்டு பணம் படுத்தும் பாடு படத்தின் மூலம் அறிமுகமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த நடிகை ஜமுனா இன்று அவரது இல்லத்தில் காலமானார்.

தெலுங்கில் நடிகையாக 16 வயதில் நடிக்கத் தொடங்கிய ஜமூனா தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து அசத்தியவர். அப்பவே பான் இந்தியா நடிகையாக பல ஊர்களுக்கு சென்று தனது நடிப்புத் திறமையை காட்டி அசத்தியவர்.

தமிழில் கடைசியாக கமல்ஹாசனின் தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் நடித்திருந்தார். எம்ஜிஆர், சிவாஜி தெலுங்கில் ரங்காராவ், நாகேஸ்வரராவ் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.

தமிழில் சிவாஜி கணேசன் உடன் தங்கமலை ரகசியம் எம்ஜிஆர் உடன் தாய் மகளுக்கு கட்டிய தாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சாவித்ரி நடித்த பல படங்களில் இவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தையும் தெய்வம் உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

அரசியலிலும் ஆர்வம் காட்டினார். 1980களில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ராஜமிந்திரி மக்களவைத் தொகுதியில் 1989-ல் தேர்வு செய்யப்பட்டார். 1990களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More