192
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகள் ஊடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் குறித்த வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
இதுவரை, 03 தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இவ்வாறு தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக அவர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனா் எனவும் அதற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
Spread the love