179
நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இன்று (15) ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவரை சுட்டுக் கொன்றமைக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
குறித்த காலத்தில் திஸ்ஸமஹாராம காவல்நிலையத்தில் கடமையாற்றிய குற்றப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love