Home உலகம் உலக வங்கியின் தலைவர் பதவியில் இருந்து விலக, டேவிட் மல்பாஸ் தீர்மானம்!

உலக வங்கியின் தலைவர் பதவியில் இருந்து விலக, டேவிட் மல்பாஸ் தீர்மானம்!

by admin

உலக வங்கியின் தலைவர் பதவியில் இருந்து விலக  டேவிட் மல்பாஸ் (David Malpass) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு வருடம் எஞ்சியுள்ள நிலையில், அவர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

தமது தீர்மானத்திற்கான காரணம் எதனையும் குறிப்பிடாத David Malpass, எதிர்வரும் ஜூன் மாதம் பதவியை இராஜினாமா செய்வதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட இவர், காலநிலை மாற்றத்திற்கு எதிரான கருத்துடையவர் என விமர்சிக்கப்பட்டார்.

கனிம எண்ணெய் பாவனை காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதை தாம் அறியவில்லை என்ற கூற்றை வௌ்ளை மாளிகை கண்டித்ததையடுத்து, David Malpass கடந்த ஆண்டு மன்னிப்பு கோரியிருந்தார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வங்கியின் தலைவராக David Malpass பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More