218
முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸம்மிலுக்கு 42 இலட்சம் ரூபாவை வழங்கியமை தொடர்பிலேயே இவ்வாறு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவாின் குடியுரிமையும் ஏழு ஆண்டுகளுக்குப் பறிக்கப்படும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Spread the love