219
ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது விரும்பின் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரங்களில் உரையாற்றும் போது செய்தி சேகரியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச யாழ்.மறைமாவட்ட ஆயர் மற்றும் நல்லை ஆதீன குரு முதல்வர் ஆகியோரை இன்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்தார்.
குறித்த சந்திப்புக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எதிர்க்கட்சி தலைவரிடம் வினாவ முற்பட்ட போது , தாம் ஊடகங்களை சந்திக்க வரவில்லை. ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. விரும்பின் யாழில் நடைபெறும் தேர்தல் கூட்டங்களில் உரையாற்றுவேன், அங்கு வந்து செய்திகளை சேகரியுங்கள் என கூறி அவ்விடத்தில் இருந்து சென்றார்.
Spread the love