மடகஸ்கரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்ட நந்துன் சிந்தக எனும் “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிக எனும் “குடு சலிந்து” ஆகியோர் இன்று (15.03.23) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று காலை 07.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய சரக்கு முனையத்தின் ஊடாக குறித்த குழுவினர் பயணித்தாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்கருக்குச் சென்றதுடன், அவர்கள் கென்யா மற்றும் இந்தியா ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
“ஹரக் கட்டா” மற்றும் “குடு சலிந்து” ஆகியோருடன் மேலும் ஆறு பேர் அந்த குழுவில் உள்ளதுடன் நந்துன் சிந்தகவின் மனைவி என்று கூறப்படும் வெளிநாட்டு பெண்ணும் அவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழுவினர் கடந்த 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக மடகஸ்கர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.