186
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் குளப்பிட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீண்டகாலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார் எனவும் , குறித்த நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நபரை கைது செய்ததாகவும் , கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனர்.
Spread the love