நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா எதிா்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போா் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் நடிகா் திலகத்தின் மகன் ராம்குமாா் கணேசன் கலந்துகொள்ளவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றாா்.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியா் எஸ்.ரகுராம் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தொடக்கவுரையை இந்திய துணைத்துாதுவா் ராகேஷ் நட்ராஜ் நிகழ்த்துவாா்.
அதனைத் தொடா்ந்து “நீங்கா நினைவில் சிவாஜி” என்ற தலைப்பில் பேராசிரியா் சி.சிவலிங்கராஜாவின் சிறப்புரை இடம்பெறும்.
நூலாசிரியா் அறிமுகத்தை சிவா பிள்ளை நிகழ்த்த, நூல் அறிமுக உரையை முனைவா் கா.வெ.செ.மருதுமோகன் நிகழ்த்துவாா்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் சி.சிறீசற்குணராஜா நூலை வெளியிடுவாா். ராம்குமாா் சிவாஜி கணேசன் சிறப்புப் பிரதிகளைக் கையளிப்பாா்.
முனைவா் கோ.சகாதேவி, முத்தையா பிள்ளை சிறிகாந்த், தேவராயபிள்ளை லெட்சுமணன்ராஜ், டாக்டா் சதீஸ்குமாா் சிவலிங்கம், முனைவா் மதிவாணன் ஆகியோா் வாழ்த்துரைகளை வழங்குவாா்கள்.
இதனைத் தொடா்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக இலங்கை, இந்திய பேச்சாளா்கள் பங்குகொள்ளும் பட்டிமன்றம் ஒன்றும் இடம்பெறும். செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலி லலீசன் இதற்குத் தலைமைதாங்குவாா்.
ஆா்வமுள்ள அனைவரும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம் என்றும் பிரவேசம் இலவசம் என ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனர்.