359
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரையை அகற்ற கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணிக்குள் புதிதாக விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த விகாரையை அகற்ற கோரியும் அதனை சூழவுள்ள 14 குடும்பங்களுக்கு சொந்தமான சுமார் 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் இன்றைய தினம் புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காங்கேசன்துறை – பருத்தித்துறை வீதியில் தையிட்டி கலைவாணி வீதியில் ஆரம்பித்த போராட்டம் பேரணியாக விகாரை வரையில் சென்று விகாரைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தினை அடுத்து விகாரையை சூழவுள்ள பகுதிகளில் பெருமளவான காவல்துறையினா் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Spread the love