Home இலங்கைபோதைப்பொருள் கடத்தல்காரர் பபாவின் உதவியாளர் கைது!

போதைப்பொருள் கடத்தல்காரர் பபாவின் உதவியாளர் கைது!

by admin

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான கலுஹத் நதீஷ் குமார அப்ரு எனும் “பபா”வின் பிரதான உதவியாளராக கருதப்படும் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (29.05.23) அஹுங்கல்ல காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட மருதானை, அஹுங்கல்ல என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட நவீன 08mm மைக்ரோ ரக பிஸ்டல், 01 தோட்டா மற்றும் 50 கிராம் ஹெரோயின் என்பன அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அஹுங்கல்ல காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More