கிரேக்க கடற்கரையில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு கிரீஸ் கடலின் 47 நாட்டிக்கல் மைல் தொலைவில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பலர் பலியாகி உள்ளனர்.
தகவலறிந்து கடற்படைக் கப்பல்களுடன் இராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.
இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் உயிரிழந்ததாகவும், மேலும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
எனினும், கிரேக்க கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளதாகவும், மேலும் காணமால் போன பலரை தேடி வருவதாகவும் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.