நாட்டில் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்ற போதிலும் சமீபத்தில் ஏழு வாகனங்கள் அடங்கிய தொடரணியொன்றுடன் இராணுவஅதிகாரியொருவர் பயணித்துக்கொண்டிருந்ததை தான் பார்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திமவீரக்கோடி நாடாளுமன்றத்தில் இன்று (20.06.23) தெரிவித்துள்ளார்.
காலியிலிருந்து கொழும்பிற்கு பயணித்துக்கொண்டிருந்தவேளை இதனை பார்த்ததாக தெரிவித்துள்ள அவர் பொதுமக்கள் உணவிற்காக பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் பல வாகனங்களை பயன்படுத்துவதற்கு யார் அனுமதி வழங்கியது என இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராணுவதளபதி விக்கும் லியனகேயின் வாகனத்தொடரணி என தான் கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். எனினும் இராஜாங்க அமைச்சர் இதற்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.