Home இலங்கைகிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு – ஒருவருக்கு கடுங் காயம்!

கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு – ஒருவருக்கு கடுங் காயம்!

by admin

கிளிநொச்சி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் இன்று (28.06.23) அதிகாலை காரில் பயணித்தவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக  காவற்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காரின் சாரதியான 38 வயதுடைய நபர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபருடன் மேலும் இருவர்கனகபுரம் பகுதிக்கு காரில் சென்றிருந்த போது வேறு ஒரு தரப்பினருடன் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து மோட்டாா் சைக்களில் பிரவேசித்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக காவற்துறையினர்  முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவற்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More