460
திருகோணமலை, குச்சவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இளைஞர்கள் குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஜெயநகர் பகுதியில் வசிக்கும் 18 மற்றும் 22 வயதான இரு இளைஞர்களே காயமடைந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love