387
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ். குலநாயகம் வீட்டில் நேற்று புதன்கிழமை இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள வீட்டிலேயே குறித்த திருட்டு சம்பவம் பதிவானது.
வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த சமயத்தில், வீடு புகுந்த திருடர்கள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிறிய தொகைப் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Spread the love