384
யாழ்ப்பாணம் இளவாலை கீரிமலை கடற்பரப்பில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 4 கடலமைகளை குருநகர் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு சென்ற இருவரை மானிப்பாய் காவல்துறையினா் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளனர்.
மானிப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, வீதியில் பயணித்த பட்டாரக வாகனமொன்றை வழிமறித்து, சோதனையிட்ட போது, வாகனத்தின் பின்புறமாக சாக்கினால் கட்டப்பட்டிருந்த மூடைகளுக்குள் இருந்து 4 கடலாமைகளை உயிருடன் கைப்பற்றினர். அதனை அடுத்து வாகனத்தில் பயணித்த 47 மற்றும் 32 வயதான கொழும்புத்துறை மற்றும் இளவாலை பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்த காவல்துறையினா் கடலமையையும், வாகனத்தையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ள காவல்துறையினா் , அதன் போது மீட்கப்பட்ட கடலமைகள் மற்றும் வாகனத்தையும் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love