2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 60 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 36 பேர் பலியாகியுள்ளடன், மேலும் 28 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் மேலும் 6 சூட்டு சம்பவங்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவற்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிலம் தொடர்பான தகராறுகள் போன்ற தனிப்பட்ட தகராறுகளுடன் தொடர்புடையவை என்று தெரிவித்த காவற்துறை ஊடகப் பேச்சாளர், பெரும்பாலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழுக்களின் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்றார்.
இந்த ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளனவா என்று வினவியபோது, கடந்த ஆண்டைப் போலவே நிலைமை இருப்பதாகவும் இருப்பினும் தரவுகளைக் குறிப்பிடாமல் உறுதியான மதிப்பீட்டை வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.