371
தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த, 79 வயதுடைய இமானுவேல் யேசுரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து தேவாலயம் சென்று கொண்டிருந்த வேளை வழியில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love