தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கோகிம்போவில் இருந்து தென்-தென்மேற்கே 41 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.
சிலியில் கடந்த 2010-ம் ஆண்டு 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத்தொடர்ந்து உண்டான சுனாமியில் 526 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.