350
நல்லூரில் யாசகம் பெற வந்த பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ்ப்பாண காவல்நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இருந்து , நல்லூர் ஆலய தேர் திருவிழாவிற்கு யாசகம் பெற இரண்டு பிள்ளைகளுடன் பெற்றோர் வந்துள்ளனர். அவர்கள் தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது நல்லூரில் யாசகம் பெற்றுள்ளனர். அதன் போது , அவர்களின் இரண்டரை வயது பெண் பிள்ளை நல்லூர் வளாகத்தில் நேற்றைய தினம் தீர்த்த திருவிழாவின் போது காணாமல் போயுள்ளது.
தமது குழந்தை காணாமல் போனது குறித்து , பெற்றோரால் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
Spread the love