658
தமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது. தமிழகம் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான கப்பல் சேவை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதற்கான முதல் முயற்சியாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பரீட்சார்த்த பயணத்தை கப்பல் மேற்கொண்டு , காங்கேசன்துறைக்கு வந்து நாகப்பட்டினம் திரும்பியிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த கப்பல் சேவை நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெற மாட்டாது எனவும் , எதிர்வரும் 12ஆம் திகதியே இடம்பெறும் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
Spread the love